/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் 12ல், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 36,436 தேர்வர்கள் பங்கேற்பு

ADDED : ஜூலை 09, 2025 01:40 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் வரும், 12ல், 124 மையங்களில் நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், 36,436 பேர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், ஜூனியர் அசிஸ்டென்ட், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் 4 போட்டித்தேர்வு வரும், 12ல் நடக்கிறது. அன்று காலை, 9:30 முதல், 12:30 மணி வரை நடக்கும் தேர்வில் மாநிலம் முழுவதும், 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்காக மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனுார், திருச்செங்கோடு, ப.வேலுார் ஆகிய, 7 தாலுகாவில், 124 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வை, 36,436 பேர் எழுதுகின்றனர். 124 முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில், 12 பறக்கும் படைகள், தேர்வு பொருட்களை எடுத்துச் செல்ல மண்டல துணை தாசில்தார் நிலையில், 32 நடமாடும் குழுக்கள், ஆர்.ஐ., நிலையில், 124 பேர், ஒரு தாலுகாவிற்கு, ஒருவர் வீதம் என, தேர்வு பணிகளை கண்காணிக்க, துணை கலெக்டர்கள், 7 பேர், டி.ஆர்.ஓ., நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 129 வீடியோ கேமராக்களும், 124 கண்காணிப்பு கேமராக்களும் தேர்வுக்கான வினாத்தாள் மையத்திலும், தேர்வு அறைகளிலும் பொருத்தப்படுகின்றன. குரூப், 4 தேர்வு நடக்கும், 124 மையங்களிலும், தலா இரண்டு போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்
பட்டுள்ளனர்.