/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளியையொட்டி மக்கள் பாதுகாப்பிற்காக 37 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பு
/
தீபாவளியையொட்டி மக்கள் பாதுகாப்பிற்காக 37 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பு
தீபாவளியையொட்டி மக்கள் பாதுகாப்பிற்காக 37 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பு
தீபாவளியையொட்டி மக்கள் பாதுகாப்பிற்காக 37 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பு
ADDED : அக் 19, 2025 04:17 AM
நாமக்கல்: தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க, நாமக்கல்லில், 37 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளிக்கு ஆடைகள், இனிப்புகள் மட்டுமின்றி அலங்கார பொருட்கள் விற்பனையும் களைகட்டியுள்ள நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தீபாவளி பண்டிகை நடுமுழுவதும், நாளை (அக்., 20) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் கடைவீதி மற்றும் சேலம் சாலை உள்ளிட்ட இடங்களில், பொருட்கள் வாங்குவதற்கு, கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக, துணிக்கடைகளில் சிறுவர், பெரியவர் ஆர்வமுடன் ஆடைகள் வாங்கி வருகின்றனர். இனிப்பு விற்பனையும் சூடாக நடந்து வருகிறது. இத்துடன், செருப்பு, அலங்கார பொருட்களின் விற்பனையும் நடந்து வருகிறது.
நாமக்கல் மெயின் சாலை, கடைவீதி, சேலம் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் மாலை நேரங்களில் அதிகமாக காணப்படுகிறது. கடைசி நேரத்தில் பொருட்கள் வாங்குபவர்களால் இரண்டு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றசெயல்களை தடுக்க, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு கோபுரங்கள் வாயிலாகவும், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களாலும் போலீசார் கண்காணித்து, ஒலிப்பெருக்கிகள் வாயிலாக எச்சரித்து வருகின்றனர்.
அதன்படி, நாமக்கல் மெயின் சாலை, கடைவீதி, சேலம் சாலையில், மூன்று கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 37 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.