/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபைல் போன் பறித்த இரண்டு பேருக்கு 'காப்பு'
/
மொபைல் போன் பறித்த இரண்டு பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 19, 2025 04:17 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, ஒழுகூர்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் தனசேகர், 26; பாலப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன். இருவரும் ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகளை நோட்டமிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, தேனி மாவட்டம், பாண்டீஸ்வரி, இவரது மகன் ரோகித், 20, ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் தனியே நின்று கொண்டிருந்தபோது தனசேகர் மற்றும் கூட்டாளி சிறுவன் இருவரும், ரோகித்தை மிரட்டி அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து சென்றனர். இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார், 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்தனர். அதில், ரோகித்தை மிரட்டி மொபைல் போனை பறித்த தனசேகர் மற்றும் சிறுவனை, நேற்று கைது செய்தனர்.