/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏ.ஐ.எம்.டி.சி., முன்னாள் தலைவருக்கு நினைவேந்தல்
/
ஏ.ஐ.எம்.டி.சி., முன்னாள் தலைவருக்கு நினைவேந்தல்
ADDED : அக் 19, 2025 04:19 AM
நாமக்கல்: அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவராகவும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராகவும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் பணியாற்றி வந்தவர் செங்கோடன்.
டிரான்ஸ்போர்ட் தொழிலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த அவர், 2008ல் காலமானார். அவரது, 17வது நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் - பரமத்தி சாலையில் அமைந்துள்ள லாரி உரிமையாளர்கள் சங்க கட்டடத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சீரங்கன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஆனந்தன், துணைத்தலைவர் பாலச்சந்திரன், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் ராஜா, பொருளாளர் ஆனந்த், துணை செயலாளர் பரமசிவம், சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் அம்மையப்பன், ஆட்டோ நகர் சங்க தலைவர் சுப்ரமணி, செயலாளர் கார்த்திக், பி.எஸ்.ஏ., டிரான்ஸ்போர்ட் அருள்ராஜ் உள்பட பலர் பங்கேற்று, செங்கோடன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.