/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் மழை எதிரொலி தீபாவளி விற்பனை மந்தம்
/
தொடர் மழை எதிரொலி தீபாவளி விற்பனை மந்தம்
ADDED : அக் 19, 2025 04:20 AM
ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் துணிக்கடை, பலகார கடைகளில் விற்பனை மந்தமாக உள்ளது.
ராசிபுரம் கடைவீதி, பூக்கடை வீதி, சின்ன கடைவீதி ஆகிய பகுதிகளில் பெரிய வணிக நிறுவனங்கள், துணிக்கடை, நடைக்கடை, பலகார கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகை ஒட்டியே நித்திய சுமங்கலி மாரியம்மன் பண்டிகையும் வந்துவிடும்.இதனால், தீபாவளி சமயத்தில் ராசிபுரத்தில் எந்த சாலையில் சென்றாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் இந்தாண்டு தீபாவளி முடிந்து, 15 நாட்களுக்கு பிறகுதான் மாரியம்மன் பண்டிகை தேர் திருவிழா நடக்கிறது.
அதேசமயம் கடந்த இரண்டு நாட்களாக, மதியம் முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கடைகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.
கூலி வேலைக்கு செல்பவர்கள், நேற்று சம்பளம் வாங்கியிருப்பார்கள் என்பதால் இன்று
நள்ளிரவு வரை, விற்பனை இருக்கும் என கடை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.