/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் அரிசி கடத்தலில் ஒரே ஆண்டில் 374 பேர் கைது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிரடி

ADDED : ஜன 02, 2025 01:18 AM
நாமக்கல், ஜன. 2-
'கடந்த, 2024ல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 374 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என, எஸ்.ஐ., ஆறுமுகநயினார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், 2024ல் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் தொடர்பாக, 364 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 374 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 89.5 டன் எடையுள்ள ரேஷன் அரிசி, துவரம் பருப்பு, 65 கிலோ, சர்க்கரை, 15 கிலோ, பாமாயில், 15 லிட்டர், கோதுமை, 40 கிலோ, காஸ் சிலிண்டர், 46 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 89 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதில், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட, 90 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரேஷன் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 140 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது, நாமக்கல் டி.ஆர்.ஓ., மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 26 லட்சத்து, 71,727 ரூபாய் அபராத வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள், 2 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் அரிசியை கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2024ல், 7 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீதும், மாவு மில் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில், மாவட்ட எல்லைகளில் இரவு நேரங்களில் தொடர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.