/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3வது முறை மோட்டார் திருட்டு போலீஸ் அலட்சியம் என புகார்
/
3வது முறை மோட்டார் திருட்டு போலீஸ் அலட்சியம் என புகார்
3வது முறை மோட்டார் திருட்டு போலீஸ் அலட்சியம் என புகார்
3வது முறை மோட்டார் திருட்டு போலீஸ் அலட்சியம் என புகார்
ADDED : பிப் 20, 2024 01:54 AM
பள்ளிப்பாளையம்:நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாஜ்நகரில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் சிறிய அறையில் மின் மோட்டார் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு, மர்ம நபர்கள் இந்த அறையின் கதவை உடைத்து மோட்டாரை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
காடச்சநல்லுார் பஞ்., துணைத்தலைவர் திருமூர்த்தி கூறியதாவது:
இதற்கு முன், இரண்டு முறை, இங்கு இருந்த மின் மோட்டார்கள் திருடு போயுள்ளன. தற்போது, மூன்றாவது முறையாக நடந்துள்ளது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.