/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மறைந்த தியாகி காளியண்ணனின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
/
மறைந்த தியாகி காளியண்ணனின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
மறைந்த தியாகி காளியண்ணனின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
மறைந்த தியாகி காளியண்ணனின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
ADDED : மே 29, 2024 07:30 AM
நாமக்கல் : இந்திய அரசியல் நிர்ணய சபையிலும், சுதந்திர இந்தியாவின் முதல் லோக்சபா எம்.பி.,யாகவும், தமிழகத்தின் முதல் சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றியவர் திருச்செங்கோட்டை சேர்ந்த தியாகி காளியண்ணன்.
இவர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், காமராஜர் என, மூத்த அரசியல் தலைவர்களுடன் இணைந்து, தேசிய அரசியலில் பயணித்தவர். கொங்கு மண்டலத்தில் நுாற்றுக்கணக்கான அரசு பள்ளிகளை துவக்க காரணமாக இருந்தவர். அவர், 2021ல் உயிரிழந்தார்.இவரது, 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடந்தது. தமிழக காங்., செய்தி தொடர்பாளரும், மாநில துணைத்தலைவருமான செந்தில் தலைமை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக், நகர தலைவர் மோகன், நாமக்கல் கொங்கு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, தியாகி காளியண்ணனின் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.