/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜார்கண்ட் தொழிலாளர்களை கடத்தி ரூ.1.25 லட்சம் பறித்த 4 பேர் கைது
/
ஜார்கண்ட் தொழிலாளர்களை கடத்தி ரூ.1.25 லட்சம் பறித்த 4 பேர் கைது
ஜார்கண்ட் தொழிலாளர்களை கடத்தி ரூ.1.25 லட்சம் பறித்த 4 பேர் கைது
ஜார்கண்ட் தொழிலாளர்களை கடத்தி ரூ.1.25 லட்சம் பறித்த 4 பேர் கைது
ADDED : ஜூலை 23, 2025 02:11 AM
பள்ளிப்பாளையம், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய, ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள், ஆறு பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி, இரண்டு காரில் கடத்தி வந்து, 1.25 லட்சம் ரூபாய் பறித்த, நான்கு பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலம், தஸ்தாரா சமன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இர்பான் அன்சாரி, 20; இவர், வேலை தேடி, தன் நண்பர், உறவினர்களான ஜாகீர் அன்சாரி, 18, அர்பாஜ் அன்சாரி, 18, இர்சாத் அன்சாரி, 18, கிஷ்மத் அன்சாரி, 30, உல்பத் அன்சாரி, 20, ஆகிய ஆறு பேரும்,
கடந்த, 21ல் சேலம் ரயில்வே ஸ்டேஷன் வந்திறங்கினார். அப்போது, தமிழ், ஹிந்தி பேசும் செயற்கை கால் பொருத்திய ஒருவர், நான்கு பேருடன் வந்து, ஜார்கண்ட் தொழிலாளர்களுடன் பேச்சுக்கொடுத்துள்ளார்.அப்போது, 'பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள நுாற்பாலையில் வேலை உள்ளது. தங்குமிடம் கொடுத்து, மூன்று வேலை உணவுடன், எட்டு மணி நேரம் வேலை, மாதம், 25,000 ரூபாய் சமபளம் தருவதாக' கூறி அழைத்துள்ளனர். இதை உண்மை என, நம்பிய அவர்கள், ஆறு பேரையும், இரண்டு காரில் ஏற்றிச்சென்று, வெப்படை உப்புபாளையம் நவக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.
தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருடன் மொபைல் போனில் பேச வைத்து, 1.25 லட்சம் ரூபாயை, ஜி-பேயில் போட வைத்துள்ளனர். பின், தொழிலாளர்களிடம் இருந்த மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு, பின் நம்பர் ஆகியவற்றைகேட்டு பறித்துக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு சென்றனர்.
செய்வதறியாது தவித்த ஜார்கண்ட் தொழிலாளர்கள், வெப்படை போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த செயலில் ஈடுபட்ட, ஆனங்கூர் அண்ணாநகரை சேர்ந்த சக்திவேல், 21, தருண்குமார், 21, மோடமங்கலம் நவீன்குமார், 20, சரத், 21, ஆகிய, நான்கு பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, மூன்று பேரை தேடி வருகின்றனர்.

