sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மோகனுார் காவிரி ஆற்றில் விடப்பட்ட 4 லட்சம் மீன்குஞ்சுகள்

/

மோகனுார் காவிரி ஆற்றில் விடப்பட்ட 4 லட்சம் மீன்குஞ்சுகள்

மோகனுார் காவிரி ஆற்றில் விடப்பட்ட 4 லட்சம் மீன்குஞ்சுகள்

மோகனுார் காவிரி ஆற்றில் விடப்பட்ட 4 லட்சம் மீன்குஞ்சுகள்


ADDED : செப் 21, 2024 03:12 AM

Google News

ADDED : செப் 21, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: காவிரி ஆற்றில், 10.80 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சியை, எம்.பி., ராஜேஸ்-குமார் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மீன் வளங்களை பாதுகாத்து பெருக்க, ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ், 2024-25ல், மொத்தம், 30 லட்சம் மீன்குஞ்சுகள், 81 லட்சம் ரூபாய் செலவில், ஆறுகளில் இருப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம், தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்திற்கு, 10.80 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு லட்சம் மீன் விரலிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்-டுள்ளது. அவை,

80 முதல், 100 மி.மீ., அளவில் வளர்க்கப்பட்டு, காவிரி ஆற்றில் இருப்பு செய்யப்படுகிறது. அதன்படி, மோகனுார் தாலுகா, மணப்பள்ளி

பஞ்., மேலப்பேட்டப்பாளையம் காவிரி ஆற்றில், மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்-பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை

வகித்தனர். எம்.பி., ராஜேஸ்குமார் காவிரி ஆற்றில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்து பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, தேர்வு

செய்யப்பட்ட, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 பயனாளிகளுக்கு, குளிர்காப்பு பெட்டியுடன், டூவீலர் வழங்கப்பட்டது.'அட்மா' திட்ட தலைவர் நவலடி, மேட்டூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் உமாகலைச்செல்வி, தர்ம-புரி

மண்டல துணை இயக்குனர் சுப்ரமணி, மீன்வள ஆய்வா-ளர்கள் கவிதா, பிரபாவதி, சார் ஆய்வாளர் கோகிலாவாணி, அரசு

அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us