/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விடுதி சமையலரை தாக்கிய 4 பேர் கைது; 3 பேர் 'எஸ்கேப்'
/
விடுதி சமையலரை தாக்கிய 4 பேர் கைது; 3 பேர் 'எஸ்கேப்'
விடுதி சமையலரை தாக்கிய 4 பேர் கைது; 3 பேர் 'எஸ்கேப்'
விடுதி சமையலரை தாக்கிய 4 பேர் கைது; 3 பேர் 'எஸ்கேப்'
ADDED : நவ 12, 2024 01:20 AM
எலச்சிபாளையம், நவ. 12-
எலச்சிபாளையம், பெரியமணலி ஜேடர்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருபவர் மெய்ஞானகுமார், 26. இவர் கடந்த, 8 இரவு, 9:30 மணிக்கு, வையப்பமலையில் இருந்து முட்டை வாங்கிக்கொண்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பெரியமணலி பண்ணாரியம்மன் கோவில் அருகே வழிமறைத்த கும்பல், முன்விரோதம் காரணமாக மெய்ஞானகுமாரை சரமாரியாக தாக்கியது.
பலத்த காயமடைந்த அவர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகார்படி, பெரியமணலியை சேர்ந்த துரைப்பாண்டியன், 23, சிரஞ்சீவி, 20, நித்தீஸ், 22, நித்தியானந்தம், 19, ஆகியோரை, நேற்று எலச்சிபாளையம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெரியமணலியை சேர்ந்த குணாளன், 19, கவின், 22, நவீன், 19, ஆகிய மூவரை போலீசார் தேடி
வருகின்றனர்.