ADDED : அக் 14, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ., பழனிசாமி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, காட்டூர் விட்டலபுரி பகுதியில் லாட்டரி விற்றது தெரியவந்தது. அங்கு நேரில் சென்ற போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த சசிகுமார், 27, பிரபு, 38, மணிகண்டன், 27, நாகராஜ், 24, ஆகிய நான்கு பேரை கைது செய்து, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.