ADDED : அக் 22, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்,நான்கு டன் பட்டாசு குப்பையை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.
பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் வீடுதோறும் சென்று, துாய்மை பணியாளர்கள் தினமும் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். குடியிருப்பு பகுதி, சாலை, திறந்த வெளிப்பகுதியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால், பட்டாசு வெடித்த குப்பை மட்டும், நான்கு டன் அகற்றப்பட்டது. பேப்பர், மத்தாப்பு கம்பிகள் உள்ளிட்டவை தரம் பிரிக்கப்பட்டு, குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.