/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
40 ஆண்டாக பட்டா வழங்க மறுப்பு வாக்காளர் அட்டையை ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பு
/
40 ஆண்டாக பட்டா வழங்க மறுப்பு வாக்காளர் அட்டையை ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பு
40 ஆண்டாக பட்டா வழங்க மறுப்பு வாக்காளர் அட்டையை ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பு
40 ஆண்டாக பட்டா வழங்க மறுப்பு வாக்காளர் அட்டையை ஒப்படைத்து தேர்தல் புறக்கணிப்பு
ADDED : மார் 02, 2024 03:38 AM
பள்ளிப்பாளையம்: ஆவத்திபாளையம் பகுதி மக்களுக்கு, 40 ஆண்டாக பட்டா வழங்க மறுப்பதால், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, மக்கள் தங்களது வாக்காளர் அடையாளர் அட்டையை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பஞ்.,க்குட்பட்ட அண்ணாநகர், பெருமாள்கோவில் பகுதி, கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பகுதியில், 150க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த, 40 ஆண்டாக பட்டா கேட்டு, பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கோபமடைந்த மக்கள், நேற்று காலை, 12:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள, வி.ஏ.ஓ., அலுவலகம் முன் திரண்டனர். அவர்கள், 'கடந்த, 40 ஆண்டாக பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கும் விதமாக, நாங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கிறோம்' என, தெரிவித்து, வி.ஏ.ஓ.,விடம் வாக்காளர் அட்டையை கொடுத்தனர். ஆனால், வி.ஏ.ஓ., வாக்காளர் அடையாள அட்டையை வாங்க எனக்கு அதிகாரம் இல்லை, என தெரிவித்து வாங்க மறுத்து விட்டார். இதனால் அலுவலக மேஜை மீது வாக்காளர் அடையாள அட்டையை வைத்து விட்டு, வெளியே வந்தனர்.
தொடர்ந்து, வி.ஏ.ஓ., அலுவலகம் முன் அமர்ந்து, எங்களது பிரச்னைக்கு தீர்வு காணும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக
தெரிவித்தனர். இதனால், அலுவலக அதிகாரிகள் உள்ளே இருந்து வெளியே வரமுடியாமல் இருந்தனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சரவணன் கூறியதாவது:
மாவட்ட கலெக்டர், வருவாய்துறை அதிகாரிகள், அமைச்சர்,
எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் தனிப்பிரிவு, மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் என, அனைத்து தரப்பிலும் பட்டா வழங்க வேண்டும் என, பலமுறை மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோரிக்கையை வலியுறுத்தி, லோக்சபா தேர்தலை புறக்கணிக்கும் வகையில், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைத்து,
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த கட்டமாக ரேஷன் கார்டை ஒப்படைத்து உண்ணாவிரத போராட்டம் இருக்கவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

