/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் பள்ளியின் 40வது மாணிக்க ஆண்டு விழா கொண்டாட்டம்

ADDED : பிப் 06, 2025 05:53 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா, மணியனுார் கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 40-வது மாணிக்க ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளி இயக்குனர்கள் சிவா, வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசுகையில்,'' மாநில, மாவட்ட அளவில் நமது பள்ளி தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருகிறது. மாணவர்கள் படிப்பது மட்டுமில்லாமல், பன்முகத்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். விளையாடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் ஆசிரியர்கள் திலகமணி, சுகுணா, கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், செந்தில்வடிவு, தேன்மொழி, பாப்பாத்தி, பூரண சந்திரிகா, செல்வராஜ், சிவக்குமார், பாலுசாமி, சந்திரோதயம் கோகிலா, அன்பரசி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதேபோல் பொதுத் தேர்வில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று தந்த ஆசிரியர்களுக்கு, பரிசுகளும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.