ADDED : செப் 23, 2026 07:08 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல்
மாவட்டம் முழுவதும், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி பதிவான மழை
அளவு விபரம்: மாவட்டத்தில் அதிகபட்சமாக சேந்தமங்கலம் பகுதியில்,
42.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக
கலெக்டர் அலுவலக வளாக பகுதியில், 30 மி.மீ., ராசிபுரத்தில், 28,
புதுச்சத்திரத்தில், 22, கொல்லிமலை செம்மேடு பகுதியில், 20 மி.மீ.,
மழை பதிவாகி உள்ளது.
இதேபோல், நாமக்கல்லில், 12,
எருமப்பட்டியில், 10, மங்களபுரத்தில், 9, மி.மீ., மழை
பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம், 173.60 மி.மீ.,
மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு, 14.47 மி.மீ.,
ஆகும்.
