/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள் 44 பேருக்கு பாராட்டு
/
தேசிய தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள் 44 பேருக்கு பாராட்டு
தேசிய தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள் 44 பேருக்கு பாராட்டு
தேசிய தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள் 44 பேருக்கு பாராட்டு
ADDED : அக் 26, 2025 12:18 AM
நாமக்கல், தேசிய தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், 44 பேருக்கு, கலெக்டர் துர்கா மூர்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மூலம், 2024ம் ஆண்டில், 121 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 8,850 யூனிட் ரத்தம், நடப்பு ஆண்டில், 89 முகாம் மூலம், 7,584 யூனிட் ரத்தம் என, மொத்தம், 9,275 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்களிடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேசிய தன்னார்வ ரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, 2024ம் ஆண்டிற்கு, 44 தேசிய தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்களை பாராட்டி, கவுரவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதாரப்பணிகள் மாவட்ட அலுவலர் பூங்கொடி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் அன்புமலர், மாவட்ட திட்ட மேலாளர் செல்வகுமார், ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

