/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் டார்லிங் ஷோரூமில் 4ம் ஆண்டு துவக்க விழா
/
ராசிபுரம் டார்லிங் ஷோரூமில் 4ம் ஆண்டு துவக்க விழா
ADDED : அக் 02, 2025 02:09 AM
ராசிபுரம், டார்லிங் ஷோரூமின், நான்காம் ஆண்டு விற்பனை துவக்க விழா, நேற்று ராசிபுரம் கிளையில் நடந்தது. கிளை மேலாளர் ராஜா தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் ஹரிஹரன், ஐயங்கார் பேக்கரி ரமேஷ், சுரபி ஹோட்டல் ரவி, ரோட்டரி சங்க துணை தலைவர் கார்த்திக், எஸ்.ஐ., பாலசுப்ரமணி ஆகியோர் ரிப்பன் வெட்டி, நான்காம் ஆண்டு விற்பனையை தொடங்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து, கிளை மேலாளர் ராஜா நினைவுப்பரிசு வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தனர்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை தின வாழ்த்துகள் மற்றும் சலுகைகள் குறித்து அறிவித்தனர். இந்தாண்டு புதிய வருகையாக உள்ள, 'டிவி', பிரிட்ஜ், 'ஏசி' உள்ளிட்ட பொருட்களின் மாடல்கள் குறித்து விரிவாக பேசினர்.