/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 4வது பட்டமளிப்பு விழா: 117 பேருக்கு வழங்கல்

ADDED : பிப் 01, 2025 12:46 AM
மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 4வது பட்டமளிப்பு விழா: 117 பேருக்கு வழங்கல்
மோகனுார்: மோகனுாரில், 2018-19ம் கல்வி ஆண்டு முதல், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி செயல்படுகிறது.
இக்கல்லுாரியில், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில் படித்து டிப்ளமோ முடித்த, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். 2023-24ம் கல்வியாண்டில், 117 மாணவ, மாணவியர் டிப்ளமோ முடித்துள்ளனர்.
அவர்களில், 112 பேர், கல்லுாரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கான பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் ரவிக்குமார் வரவேற்றார். நாமக்கல் தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாணவர்களுக்கு பட்டச்சான்று வழங்கினார்.
அப்போது, பாலிடெக்னிக் மாணவர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் முறை, அரசால் கட்டமைக்கப்பட்டுள்ள அறிவு சார் நுாலகம் போட்டித்தேர்வுக்கு உதவும் வழிவகை, தொழில் முனைவோராக மாற விரும்பும் மாணவர்களுக்கு, மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கும் நிதிஉதவி குறித்து விளக்கி பேசினார். அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.