/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் காயம்
/
பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் காயம்
ADDED : அக் 12, 2025 02:42 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய-போது ஆட்டோ கவிழ்ந்து டிரைவர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், எருமாபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 9 பேர் நேற்று, திருச்செங்கோடு அருகேயுள்ள வட்டூர் கம்பத்தார் குலதெய்வ கோவிலுக்கு
பயணிகள் ஆட்டோவில் சென்று விட்டு,
வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
மதியம், 12:30 மணியளவில், மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலையின் குறுக்கே அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென சென்றார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ டிரைவர் பிரேக் பிடித்ததில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் டிரைவர் கண்ணன் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த காவியா, செல்வி, ஜெயா, சாந்தி என மொத்தம் 5 பேர் படுகாயம-டைந்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மல்ல சமுத்திரம் போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.