/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு
/
பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு
ADDED : அக் 12, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 52. இவருடைய மகன் கோட்டையன், 22. கோட்-டையன் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.
தனது தந்-தையிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வாங்குவார்.இந்நிலையில், நேற்று முன்தினம் தந்தையிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோட்டையன், அங்கிருந்த அரிவாளால் ஈஸ்வரனை வெட்டினார். இதில் படுகாய-மடைந்த அவரை மீட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவ ம-னைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய கோட்டையனை சேந்தமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.