/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இ.பி.எஸ்., உதவியாளரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது
/
இ.பி.எஸ்., உதவியாளரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது
இ.பி.எஸ்., உதவியாளரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது
இ.பி.எஸ்., உதவியாளரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது
ADDED : பிப் 14, 2024 11:01 AM
நாமகிரிப்பேட்டை: முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சின் உதவியாளர் தோட்டத்து வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் அருண்பிரகாஷ், 32; முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சின் உதவியாளர். அருண்பிரகாஷ், சேலத்தில் தங்கியுள்ளார். நாரைக்கிணறு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில், அவரது மனைவி, தந்தை, தாய் ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த, 9 நள்ளிரவு, 2:00 மணிக்கு, 2 கார்களில் வந்த மர்ம கும்பல், தோட்டத்து வீட்டில் பொருத்தியிருந்த, 'சிசிடிவி' கேமராக்களை உடைத்துவிட்டு, வீட்டுக்குள் செல்ல முயன்றனர்.
இதையறிந்த அருண்பிரகாஷின் மனைவி கூச்சலிட்டதால், மர்ம கும்பல் அங்கிருந்த தப்பி ஓடியது. இதுகுறித்து, ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், மர்ம கும்பலை பிடிக்க, ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ராசிபுரம் அடுத்த ஏ.டி.சி., டிப்போ அருகே சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நின்றிருந்தது. அதிலிருந்த துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அடுத்த உடன்குடி பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் மகன் மணிகண்டன், 31, பாலகிருஷ்ணன் மகன் சுயம்புலிங்கம், 25, ஜெயக்குமார் மகன் பார்வதிமுத்து, 25, வின்செண்ட் மகன் ஜெபக்குமார், 24, டிரைவர் முருகானந்தம், 48, உள்ளிட்ட, 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அருண்பிரகாஷ் வீட்டில் கொள்ளையடிக்க வந்த, 8 பேர் கொண்ட கும்பல் என்பதும், சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, 5 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, 3 பேரை தேடி வருகின்றனர்.

