ADDED : செப் 29, 2025 02:05 AM
பள்ளிப்பாளையம்;நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலை கார்னர் பகுதியை சேர்ந்தவர் முருகன், 33; விசைத்தறி கூடம் வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு, கதவை மூடிவிட்டு குடும்பத்துடன் துாங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்கம் கதவு திறந்த நிலையில் இருந்தது.
மேலும், பீரோவும் திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் பார்த்தபோது அதில் வைத்திருந்த, ஐந்து பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள், வீட்டின் பின் பக்கம் கதவை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.