/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'5 டவுன் பஸ்கள் புதிய வழித்தடத்தில் இயக்கம்'
/
'5 டவுன் பஸ்கள் புதிய வழித்தடத்தில் இயக்கம்'
ADDED : நவ 12, 2024 01:24 AM
நாமக்கல், நவ. 12-
''நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 5 டவுன் பஸ்கள் புதிய வழித்தடங்களில் இன்று முதல் இயக்கப்படுகிறது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று முன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி, துறையூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமே, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளுக்கு பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்சில் சென்று அங்கிருந்தே பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனர்.
இதற்கிடையே, நேற்று, நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் எம்.பி., ராஜேஸ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகள் தரப்பில் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, 5 டவுன் பஸ்களை புதிய வழித்தடங்களில் நீட்டிப்பு செய்ய உத்தரவிட்டார்.
இதுகுறித்து எம்.பி., ராஜேஸ்குமார் கூறியதாவது:
இன்று முதல் நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வள்ளிபுரம் புறவழிச்சாலை வரை, 2 டவுன் பஸ்களும், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வரை, 2 டவுன் பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டிற்கு ஒரு டவுன் பஸ்சும் புதிய வழித்தடங்களில், அதிகாலை, 5:30 முதல், இரவு, 9:45 மி வரை இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர்
கூறினார்.