/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளியையொட்டி 50 'சிசிடிவி' பொருத்தம்
/
தீபாவளியையொட்டி 50 'சிசிடிவி' பொருத்தம்
ADDED : அக் 31, 2024 12:13 AM
நாமக்கல்:தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள
கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ராஜேஸ்கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தார். நாடு முழுவதும், தீபாவளி
பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதையடுத்து, கடந்த சில
நாட்களாக, புத்தாடைகள், நகைகள், பட்டாசு, இனிப்பு வகைகள்
வாங்குவதற்காக, நாமக்கல் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
அதற்காக,
பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, சேலம் சாலை மற்றும் பரமத்தி சாலை பகுதிகளில்,
50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன்
பதிவுகளை, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டள்ள 'மெகா' சைஸ்
திரையில், எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், நேற்று நேரடியாக ஆய்வு செய்தார்.
அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என,
போலீசாருக்கு அறிவுறுத்தினார். இன்ஸ்பெக்டர் கபிலன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.