/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.51.71 லட்சம் உண்டியல் காணிக்கை
/
ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.51.71 லட்சம் உண்டியல் காணிக்கை
ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.51.71 லட்சம் உண்டியல் காணிக்கை
ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.51.71 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED : அக் 19, 2024 02:15 AM
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில்களில் மூன்று மாதங்க-ளுக்கு ஒரு முறை பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பணம், நகைகள் எண்ணப்படுவது வழக்கம். கடந்த ஜூன், 21ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரு கோவில்களில் உள்ள, 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அவை, ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் எண்ணும் பணி காலை 10:00 மணிக்கு தொடங்கி இரவு, 8:00 மணி வரை நடந்தது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் இளையராஜா, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரம-ணிகாந்தன் ஆகியோர் மேற்பார்வையில், அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வசீராளன், திருச்செங்கோடு தனியார் கல்-லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் கூட்டப்பள்ளி சர்வ சக்தி மாரியம்மன் சேவை குழுவினர் காணிக்கை தொகை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 57 லட்சத்து, 71 ஆயிரத்து, 828 ரொக்க பணமும், 53 கிராம் தங்கம், 273 கிராம் வெள்ளி ஆகிய-வற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

