/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை பொருட்கள் விற்ற 525 கடைகளுக்கு 'சீல்'
/
போதை பொருட்கள் விற்ற 525 கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 07, 2025 04:03 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், போதை பொருட்கள் விற்பனை செய்-யப்பட்ட, 525 கடைகள் சீல் வைக்கப்பட்டு, 1.75 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், கிராம பஞ்சாயத்து செயலாளர்களுக்கான போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: கிராம பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ் புகையிலை, கூலிப் உள்ளிட்டவற்றின் பயன்பாடு உள்-ளதா என்பதை, அப்பகுதி பஞ்சாயத்து செயலாளர்கள் கண்கா-ணிக்க வேண்டும். பெட்டி கடைகள், டீ கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல் முறை, 25,000 ரூபாயும், இரண்டாம் முறை, 50,000 மற்றும் இறுதியாக ஒரு லட்சம் ரூபாய் வரை அப-ராதம் விதிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
தற்போது வரை, 525 கடைகள் சீல் வைக்கப்பட்டு, 1.75 கோடி ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ்-துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை என அனைத்து துறை-களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, பொது
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.