/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலவச கண் பரிசோதனை முகாம் அறுவை சிகிச்சைக்கு 59 பேர் தேர்வு
/
இலவச கண் பரிசோதனை முகாம் அறுவை சிகிச்சைக்கு 59 பேர் தேர்வு
இலவச கண் பரிசோதனை முகாம் அறுவை சிகிச்சைக்கு 59 பேர் தேர்வு
இலவச கண் பரிசோதனை முகாம் அறுவை சிகிச்சைக்கு 59 பேர் தேர்வு
ADDED : அக் 07, 2024 03:49 AM
மோகனுார்: நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மோகனுார் காவிரி லயன்ஸ் சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்து-வமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் மோகனுார் சுப்பி-ரமணியம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. சங்க தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். செயலாளர் தியாகு, செந்தில்-குமார் ஆகியோர் வரவேற்றனர். சுப்பிரமணியம் கல்லுாரி சேர்மன் பழனியாண்டி, முன்னாள் மாவட்ட கவர்னர் குமரேசன் ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமில், கண்புரை, மாறுகண், கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண் நீர்ப்பை அடைப்பு, கண் அழுத்த நோய், கண் கருவி-ழிப்புண், சர்க்கரை வியாதி, கண்ணில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும்
பரிசோதனை செய்-யப்பட்டு, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 220 பேர் பங்கேற்று பயன்பெற்-றனர். அதில், 59 பேர் தேர்வு செய்யப்பட்டு, உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை செய்வதற்காக, சேலம் அரவிந்த் கண் மருத்துவ-மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.