/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அறிவுரு சித்தர் பீடங்களில் 5ம் ஆண்டு குருபூஜை விழா
/
அறிவுரு சித்தர் பீடங்களில் 5ம் ஆண்டு குருபூஜை விழா
அறிவுரு சித்தர் பீடங்களில் 5ம் ஆண்டு குருபூஜை விழா
அறிவுரு சித்தர் பீடங்களில் 5ம் ஆண்டு குருபூஜை விழா
ADDED : நவ 24, 2024 03:06 AM
மோகனுார்: மோகனுார் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் எதிரே, ஐயா கோவில் என்றழைக்கப்படும், அறிவுரு சித்தர் பீடங்-களில், ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா மிக விமரிசையாக துவங்கியது. முதல் நாளான, நேற்று முன்தினம், காவிரி ஆற்-றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்துக்-கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, ஐயா பீடத்தின் மேல் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை நடந்தது. இரவு, விநாயகர் வழிபாடு, திருமகள் திருவி-ளக்கு பூஜை, தமிழ் வேத முறைப்படி மிக விமரிசையாக நடந்-தது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, திரு தாண்டகம் திருமுறை விண்ணப்பம் பேரொளி வழிபாடு, திருக்குட நன்னீராட்டும் நடந்தது. அதைய-டுத்து, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனையும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.