/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6ல் பிரதமர் மோடி வருகைகருப்புக்கொடி காட்ட திட்டம்
/
6ல் பிரதமர் மோடி வருகைகருப்புக்கொடி காட்ட திட்டம்
ADDED : ஏப் 02, 2025 01:47 AM
6ல் பிரதமர் மோடி வருகைகருப்புக்கொடி காட்ட திட்டம்
நாமக்கல்,:நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கை: மத்திய பா.ஜ., அரசு, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, 'நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை அமல் படுத்தப்படும்; விவசாயிகளின் வருமானம், 2022க்குள் இரட்டிப்பாக்கப்படும்' என, பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையான, எம்.எஸ்.பி.,யை அமல்படுத்தாமல், விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ., அரசை கண்டிக்கும் வகையில், வரும், 6ல், பாம்பன் பாலத்தை திறந்து வைக்க, தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி கருப்பு கொடி காட்டப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.