/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சூதாடிய 6 பேர் கைது பணம், டூவீலர்கள் பறிமுதல்
/
சூதாடிய 6 பேர் கைது பணம், டூவீலர்கள் பறிமுதல்
ADDED : அக் 12, 2025 02:48 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, பணம் வைத்து சீட்டு விளையாடிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பணம், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.புதுச்சத்திரம் போலீசார் பாச்சல் ஏரியில் சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது, பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் மூவர் தப்பி ஓடினர். தப்ப முயன்ற கடந்தப்பட்டியை சேர்ந்த மாணிக்கம், 65, பாச்சல் சதீஸ், 36, குருசாமிபாளையம் சகுபால், 48, கடந்தப்-பட்டி சண்முகம், 41, பாச்சல் ஜெயக்குமார், 38, லோகு, 30, ஆகிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 9,640 ரூபாய், 6 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். புதச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிந்து தப்பியோ-டிய திருநாவுக்கரசு, தினேஷ், ஸ்ரீதர் ஆகியோரை தேடி வருகிறார். கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.