/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 12, 2025 02:48 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டு வேலு தலைமையில், 'வாங்க கற்றுக்கொள்வோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடத்-தப்பட்டது.
பொதுமக்களுக்கு தீயணைப்பான்களை பயன்படுத்தும் முறை, காஸ் சிலிண்டர் கசிவு அல்லது தீ விபத்து பற்றிய விழிப்பு-ணர்வு, மின்சார தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு, வாகன தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு, பட்டாசு வெடிக்கும் போது செய்-வது, செய்யக்கூடாதது பற்றிய விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.
நகரின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடந்தது. பொது-மக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.