/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வக்கீல் வீட்டில் 6 பவுன் திருட்டு
/
வக்கீல் வீட்டில் 6 பவுன் திருட்டு
ADDED : மே 16, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன், 39, வக்கீலாக உள்ளார். இவர் தற்போது ராசிபுரம் கோரைக்காடு பகுதியில் வசித்து வருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க காசு, தோடு, செயின் என மொத்தம், 6 பவுன் நகையை காணவில்லை. இது குறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.