/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வூதியர்கள் கூட்டத்தில் 60 மனுக்களுக்கு தீர்வு
/
ஓய்வூதியர்கள் கூட்டத்தில் 60 மனுக்களுக்கு தீர்வு
ADDED : டிச 27, 2024 01:14 AM
ஓய்வூதியர்கள் கூட்டத்தில்
60 மனுக்களுக்கு தீர்வு
நாமக்கல், டிச. 27-
நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. நாமக்கல்லில், மொத்தம், 13,690 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். 60 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஓய்வூதியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், ஓய்வூதியர்கள் சங்க உறுப்பினர்கள், 14 பேர், 54 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் மனுவை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து தீர்வு வழங்க வேண்டும். மேலும், ஓய்வூதியர்கள் அனைவரும் நம்மை போன்று பல்வேறு அரசுத்துறைகளில் நமக்கு முன்னர் பணி செய்தவர்கள் தான் என்பதை கருத்தில் கொண்டு முழு ஈடுபாட்டுடன் இந்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என, கலெக்டர் உமா கேட்டுக்கொண்டார். டி.ஆர்.ஓ., சுமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.