/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
600 மூட்டை மஞ்சள் ரூ.48 லட்சத்துக்கு ஏலம்
/
600 மூட்டை மஞ்சள் ரூ.48 லட்சத்துக்கு ஏலம்
ADDED : செப் 18, 2024 06:54 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 10,899 ரூபாய், அதிகபட்சம், 15,375 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 9,042 ரூபாய், அதிகபட்சம், 13,342 ரூபாய்; பனங்காலி ரகம் குறைந்தபட்சம், 3,899 ரூபாய், அதிகபட்சம், 13,002 ரூபாய்க்கு விற்பனையானது.
விரலி, 430, உருண்டை, 150, பனங்காலி, 20 என, மொத்தம், 600 மூட்டை மஞ்சள், 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், தொடர் மழை காரணமாக மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டிருந்தது. 15 நாட்களுக்கு பின், நேற்று ஏலம் நடந்ததால், இரண்டு மடங்கு மஞ்சள், நேற்று விற்பனையாகியுள்ளது. கடந்த, 3ல், 21 லட்சம் ரூபாயக்கு மட்டுமே விற்பனையான நிலையில், நேற்று, 48 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.