/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஐயப்ப சுவாமி கோவிலில் 60ம் ஆண்டு விழா
/
ஐயப்ப சுவாமி கோவிலில் 60ம் ஆண்டு விழா
ADDED : டிச 06, 2025 06:21 AM

நாமக்கல்: நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், 60ம் ஆண்டு விழா, வரும், 10ல் துவங்கி, 5 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி, நேற்று ஐயப்பன் கோவிலில் இருந்து பலபட்டரை மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்ய பக்தர்கள் பால்-குடம் எடுத்து சென்றனர்.
அதேபோல், நாளை ரெட்டிப்பட்டி கந்-தகிரி பழனியாண்டவர் கோவிலுக்கு பாதயாத்திரையாக பால்-குடம் எடுத்து சென்று அபிஷேகம் செய்யப்படுகிறது. டிச., 10 காலை, 9:00 மணிக்கு ஐயப்பனுக்கு லட்சார்ச்சனையை தொடர்ந்து, பக்தி பாடல்கள் இசை நிகழ்ச்சியும், 11ல் இசைக்கல்-லுாரி மாணவர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.டிச., 12ல் ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கு சகஸ்ர நாமம் அர்ச்சனை, இரவு ஆன்மிக சொற்பொழிவும், 13 காலை, 7:45 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம், மஹா தீபாராதனையும், அன்று மாலை, 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமி உற்சவர் மூர்த்தி திருவீதி ஊர்வலம் நடக்கிறது. டிச., 14ல், கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளியில் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.

