/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.50 கோடி மதிப்பிலான கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ரூ.1.50 கோடி மதிப்பிலான கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்
ரூ.1.50 கோடி மதிப்பிலான கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்
ரூ.1.50 கோடி மதிப்பிலான கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : டிச 06, 2025 06:23 AM

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் பிர-சித்தி பெற்ற விநாயகர், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ-விலுக்கு சொந்தமாக, 0.8 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், இ-சேவை மையம், தண்ணீர் டேங்க், அங்கன்வாடி மையம், சுகாதாரத்துறை கட்டடம் உள்பட, 5 வீடுகளும் ஆக்கிர-மித்து கட்டப்பட்டிருந்தன. கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிர-மிப்பை அகற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட நாட்க-ளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவா-மிநாதன், ஆலய நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் செந்தில்-குமார், செயல் அலுவலர் செந்தில்ராஜா, ராசிபுரம் சரக ஆய்வாளர் கீதாமணி மற்றும் மங்களபுரம் போலீசார் முன்னிலையில் ஆக்கிர-மிப்புகள் அகற்றப்பட்டன.இதில், இ-சேவை மையம், தண்ணீர் டேங்க் ஆகியவைக்கு ஊராட்சி நிர்வாகம் வாடகை தர ஒப்புக்கொண்டதால் அவற்றை அகற்றவில்லை. மற்ற வீடுகள், சேதமடைந்த நிலையில் இருந்து அங்கன்வாடி கட்டடம், சுகாதாரத்துறை கட்டடம் ஆகியவை இடிக்கப்பட்டன. இதில், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்-களை மீட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை, அந்த இடத்தில் அத்துமீறி எவரும் வரக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை பல-கையும் வைத்து சென்றனர்.

