/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் ஐயப்பன் கோவிலில் 60ம் ஆண்டு மண்டல பூஜை
/
நாமக்கல் ஐயப்பன் கோவிலில் 60ம் ஆண்டு மண்டல பூஜை
ADDED : டிச 28, 2025 07:25 AM
நாமக்கல்: நாமக்கல்-மோகனுார் சாலையில், பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 60ம் ஆண்டு மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று நடந்த மண்டல பூஜை விழாவில், பக்தர்கள் வழங்கிய நெய்யை கொண்டு, உற்சவர் மற்றும் மூலவர் ஐயப்பன் சுவாமிக்கு நெய்யபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் ஐயப்பன் சுவாமி தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர்கள், ஐயப்ப சுவாமி அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

