sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

650 குடும்பத்தினர் குடிநீரின்றி தவிப்பு

/

650 குடும்பத்தினர் குடிநீரின்றி தவிப்பு

650 குடும்பத்தினர் குடிநீரின்றி தவிப்பு

650 குடும்பத்தினர் குடிநீரின்றி தவிப்பு


ADDED : ஜன 21, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், நவணி தோட்டக்கூர்பட்டி பஞ., சக்தி சாமுண்டி நகர், இந்திரா நகர், அம்மன் நகர், நந்தவன குடியி-ருப்பு, புதுச்சத்திரம் நகர், எம்.டி.எஸ்., நகர் ஆகிய பகுதிகளில், 650க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்ப-குதி மக்களுக்கு, புதுச்சத்திரம் அரசு துவக்கப்பள்ளி அருகில் உள்ள மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த, 6 மாதமாக மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர்

வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் பாச்சல், கோவிந்தம்பாளையம் பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, பா.ம.க., மாவட்ட துணைச்செயலாளர் குமார், பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், 'கடந்த, 6 மாதங்களாக குடிதண்ணீர் இன்றி தவித்து வருகிறோம். எப்போது கேட்டாலும் பைப் உடைந்து

விட்டது என, சொன்ன-தையே சொல்லி வருகின்றனர். குடிநீர் பிடிக்க அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று அலைந்து வருகிறோம். எனவே, அவசர நிலை கருதி விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்' என,

தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us