/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
4 டன் வெடிபொருட்கள் பறிமுதலில் 7 பேர் கைது
/
4 டன் வெடிபொருட்கள் பறிமுதலில் 7 பேர் கைது
ADDED : மார் 06, 2025 03:48 AM
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலையில், கடந்த, 28ம் தேதி மாலை, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது சேலத்திலிருந்து கோவை சென்ற 'ஈச்சர்' வேனை நிறுத்தினர். வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்த டிரைவர், ஆவணங்களை கொடுப்பது போல் வந்து, திடீரென ஓடி தலைமறைவானார்.
வேனில் சோதனையிட்டதில், ஜெலட்டின் குச்சி, அம்மோனியா நைட்ரேட் வெடி பொருட்கள், நான்கு டன் அளவுக்கு இருந்-தது. பறிமுதல் செய்த போலீசார், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வேனில் கிடைத்த ஆவணங்களின்படி தனிப்-படை போலீசார் விசாரித்தனர்.இதன் அடிப்படையில் தப்பியோடிய டிரைவர் பார்த்திபன், ௩௯, மற்றும் கிருபாசங்கர், 45, பார்த்திபன், 39, ராஜேந்திரன், 54, அப்துல் நஜீத், 40, சுருளிராஜன், 44, ராமலிங்கம், 51, பழனிச்-சாமி, 57, என ஏழு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
எங்கிருந்து எதற்காக யாருக்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. அதன் பிறகே முழு விபரம் தெரி-விக்கப்படும் என்று, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
ரூ.3 லட்சம்
நிவாரணம்
விவசாய குட்டையில் மூழ்கி பலியான மாணவன், ஹெச்.எம்., குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி-வித்துள்ள முதல்வர் ஸ்டாலின், மாணவன் நித்தீன், தலைமையா-சிரியர் கவுரிசங்கர் ராஜூ குடும்பத்துக்கு, தலா மூன்று லட்சம் ரூபாயை, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.