/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீள பாம்பு
/
வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீள பாம்பு
ADDED : டிச 11, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் அடுத்த கணக்கம்பாளைம், பொம்மம்-பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 35; கார்-பெண்டர். இவரது வீட்டில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, பாம்பு ஒன்று புகுந்தது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ், நாமக்கல் தீய-ணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாத்ரூம் அருகே பதுங்கி இருந்த, 7 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின், காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

