/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை குண்டூர்நாடு பஞ்.,ல் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி
/
கொல்லிமலை குண்டூர்நாடு பஞ்.,ல் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி
கொல்லிமலை குண்டூர்நாடு பஞ்.,ல் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி
கொல்லிமலை குண்டூர்நாடு பஞ்.,ல் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி
ADDED : ஜன 02, 2025 01:21 AM
சேந்தமங்கலம், ஜன. 2-
கொல்லிமலை, குண்டூர்நாடு பஞ்.,ல் நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து, 7 ஆடுகள் பலியாகின.
கொல்லிமலையில், கடந்த வாரம் மர்ம விலங்கு கடித்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இந்த ஆடுகளை கடித்து குதறிய விலங்கு சிறுத்தை புலி என, விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொல்லி மலையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறையினர், 'டிராக் கேமரா' பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், வெள்ளக்குழிப்பட்டியில், 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து உயிரிழந்தன. இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை குண்டூர்நாடு, திண்டூர்பட்டி பகுதியில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 7 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனச்சரகர் சுகுமார், கால்நடைத்துறையினர் உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறியதாவது: நத்துக்குழிப்பட்டியில், மர்ம விலங்கு, ஆடுகளை கடித்து குதறி வந்ததால், அப்பகுதியில் டிராக் கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், சில நாட்களாக அப்பகுதிக்கு மர்ம விலங்கு செல்லாமல், 5 கிலோ மீட்டர் துாரமுள்ள வேறு கிராமங்களில் ஆடுகளை கடித்து வருகின்றன. இதனால், கேமராக்களை வேறு இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.