ADDED : நவ 14, 2024 07:19 AM
நகை கொள்ளைநாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்-துபால்ராஜ், 80; மனைவி விசாலாட்சி, 76; இவரது மகன் சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். நேற்று இரவு, முத்-துபால்ராஜ் கடைக்கு சென்றுவிட்டார். அப்போது, 30 வயது மதிக்-கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், முகமூடி அணிந்து கொண்டு அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளர்.
அங்கு தனியாக இருந்த விசாலாட்சி கையை கட்டி, வாயில் துணி வைத்து அடைத்தார். தொடர்ந்து, அவர் அணிந்திருந்த, 7 பவுன் தாலிச்செயினை பறித்து சென்றார். சிறிது நேரத்தில் முத்து-பால்ராஜ் வீட்டிற்கு வந்ததும்,
சம்பவத்தை கண்டு அதிர்ச்சிய-டைந்தார். இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா மூலம் மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

