/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டுக்கூடு 72 கிலோ ரூ.38,000க்கு ஏலம்
/
பட்டுக்கூடு 72 கிலோ ரூ.38,000க்கு ஏலம்
ADDED : டிச 28, 2024 02:12 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்-றனர். நேற்று, 72 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 600 ரூபாய், குறைந்தபட்சம், 569 ரூபாய், சராசரி, 572 ரூபாய் என, 72 கிலோ பட்டுக்கூடு, 38,000 ரூபாய்க்கு விற்பனையானது.
9 வயது சிறுமிக்கு தொல்லைபள்ளி பஸ் டிரைவர் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, நெய்க்காரன்பட்டியை சேர்ந்தவர் அசோகன், 54. இவர், நாமக்கல் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது, பஸ்சில் ஏற்றி வரும், 4ம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால், மாணவி, பஸ்சில் செல்ல மறுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, மாணவி டிரைவர் அசோகனின் செயல் குறித்து தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். புகார்படி, போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அசோகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

