/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
15 நிமிடத்தில் 75 யோகா 5 வயது சிறுமி சாதனை
/
15 நிமிடத்தில் 75 யோகா 5 வயது சிறுமி சாதனை
ADDED : அக் 07, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரவீன்குமார், சுஜிதா; இவர்களது மகள் கிருஷ்மிதா, 5; இவர் உலக சாதனைக்காக, யோகா நிகழ்ச்சி நடத்தினார். முன்னாள் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.
இதையடுத்து, 15 நிமிடத்தில், 75 யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்தார். இது, ஹைரேன்ஜ் புக் அப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருணா பழனிச்சாமி, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் செந்தில், தெற்கு ஒன்றிய செயலர் குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.