/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
79வது சுதந்திர தின விழா கோலாகலம் ரூ.35.32 லட்சத்தில் நலத்திட்ட உதவி
/
79வது சுதந்திர தின விழா கோலாகலம் ரூ.35.32 லட்சத்தில் நலத்திட்ட உதவி
79வது சுதந்திர தின விழா கோலாகலம் ரூ.35.32 லட்சத்தில் நலத்திட்ட உதவி
79வது சுதந்திர தின விழா கோலாகலம் ரூ.35.32 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ADDED : ஆக 16, 2025 02:00 AM
நாமக்கல், நாமக்கல்லில், 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 15 பயனாளிகளுக்கு, 35.32 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு திடலில், 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் துர்காமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கலெக்டர் துர்காமூர்த்தி, போலீஸ் எஸ்.பி., விமலா ஆகியோர், வெண்புறாக்களையும், வண்ண பலுான்களையும் வானில் பறக்க விட்டனர். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
விழாவில், மாற்றுத்திறனாளிகள், கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில், 15 பயனாளிகளுக்கு, 35.32 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பணியாற்றிய, 35 போலீசார், 253 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என, மொத்தம், 288 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 640 மாணவ, மாணவியர் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட வன அலுவலர் மாதவியாதவ், டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., அங்கித்குமார் ஜெயின், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உள்பட பலர் பங்கேற்றனர்.
* இதேபோல், மல்லசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் சுமதி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்கு, 25 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ஜாகிர்உசேனுக்கு, சந்தன மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.
* சேந்தமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில், தலைவர் சித்ரா தனபாலன் தேசியக்கொடி ஏற்றினார். துணை தலைவர் ரகு, செயல் அலுவலர் வனிதா, இளநிலை உதவியாளர் சரவணன், பேரூராட்சி அலுவலர்கள் சந்திரசேகரன், சக்திவேல், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
* வெண்ணந்துார், நெ.3.கொமராபாளையம் பஞ்., பகுதியில், பா.ஜ., சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதேபோல், வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், டவுன் பஞ்., தலைவர் ராஜேஷ் தலைமையில், பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
* நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், 79வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. வங்கியின் சேர்மன் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் சண்முகம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சரவணன், நிர்வாக குழு இயக்குனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.