/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
79ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா
/
79ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா
ADDED : நவ 28, 2025 01:29 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த பழனி யாண்டவர் கோவிலில், 79ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகில், கொல்லிமலை அடிவாரத்தில் கூவைமலையில் வரலாற்று சிறப்பு மிக்க பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. அருணகிரி நாதரால் பாடல் பெற்ற கோவில் மட்டுமின்றி, வல்வில்ஓரி காலத்தில் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத தீப திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு விழா டிச., 3ம் தேதி தொடங்குகிறது.
காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபி ேஷகம் நடைபெறும். 10:00 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி, 11:00 மணிக்கு குறிஞ்சி கிழவன் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. 12 மணி வரை கூவைமலை முருகனின் பெருமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
பின்னர் அன்னதானம் நடைபெறும். தொடர்ந்து இன்னிசை பாட்டு, பட்டி மன்றம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி பவுர்ணமி பூஜை நடைபெறும். பேளுக்குறிச்சியில் இருந்து, கோவிலுக்கு செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

