/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டி டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
எருமப்பட்டி டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
எருமப்பட்டி டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
எருமப்பட்டி டவுன் பஞ்., கூட்டம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : நவ 28, 2025 01:29 AM
எருமப்பட்டி, நஎருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் நடந்த கூட்டத்தில் குடிநீர், மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எருமப்பட்டி டவுன் பஞ்., சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். செயல் அலுவலர் யவனாராணி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரவி வரவேற்றார். இதில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னு சாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டவுன் பஞ்சாயத்தில், 3.76 லட்சம் ரூபாய்க்கு குடிநீர் திட்டப் பணிகளை விரிவுபடுத்துதல், மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவி அலுவலர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.