/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துாரில் இரவில் பனி பகலில் வெயிலால் மக்கள் அவதி
/
வெண்ணந்துாரில் இரவில் பனி பகலில் வெயிலால் மக்கள் அவதி
வெண்ணந்துாரில் இரவில் பனி பகலில் வெயிலால் மக்கள் அவதி
வெண்ணந்துாரில் இரவில் பனி பகலில் வெயிலால் மக்கள் அவதி
ADDED : நவ 28, 2025 01:28 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில், இரவில் பனிப்பொழிவும், பகலில் வெப்பமும் நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
வெண்ணந்துார் சுற்று பகுதிகளில், இரவு நேரத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. பகலில் கடும் வெயில் வீசுகிறது. எதிரெதிர் மாறுபட்ட பருவநிலை நிலவுவதால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் சிரமப்படுகின்றனர். காலை 8:00 மணி வரை குளிர் தாக்கம் இருக்கிறது. அதன் பிறகு துவங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5:00 மணி வரை நீடிக்கிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, இரவில் குளிர் வீசுவதால் மக்கள்
அவதிப்படுகின்றனர்.