/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிசய மாடுகளை வணங்கிய பொதுமக்கள்
/
அதிசய மாடுகளை வணங்கிய பொதுமக்கள்
ADDED : நவ 28, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையத்தில், அதிசய மாடுகளை பொதுமக்கள் பார்த்து வணங்கினர்.
திருப்பதியை சேர்த்தவர் ஏழுமலை, 45. இவர், சரக்கு வாகனத்தில் இரண்டு மாடுகளை ஏற்றிக் கொண்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிப்பாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, போலீஸ் ஸ்டேஷன் பிரிவு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்து கொண்டு இருந்தார்.
ஒரு மாட்டிற்கு மூன்று கொம்பு, மூன்று கண்கள், மற்றொரு மாட்டிற்கு 5 கால்கள் உள்ளது என இவர் சொல்ல, பொதுமக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு, அதிசய மாடுகளை வணங்கி, காணிக்கை போட்டு சென்றனர்.

